நிலக்கண்ணி வெடிகளை தடை செய்வதற்கான சட்டத்தை வகுக்க அமைச்சரவை அனுமதி!

நிலக்கண்ணி வெடிகளை தடை செய்வதற்கான சட்டத்தை வகுக்க அமைச்சரவை அனுமதி!

நிலக்கண்ணி வெடிகளை தடை செய்வதற்கான சட்டத்தை வகுக்க அமைச்சரவைஅனுமதி வழங்கியுள்ளது.

(Anti-personnelMines)  நிலக்கண்ணி வெடிகளை பயன்படுத்தல் மொத்தமாக சேகரித்தல், மற்றும் பரிமாறுதலை தடை செய்தல் மற்றும் அவற்றை அழிப்பது தொடர்பானஇணக்கப்பாடு இலங்கையினால் 2017ஆம்ஆண்டு டிசம்பர் 13ஆம் திகதிகைச்சாத்திட்டுள்ளது.

இந்த இணக்கப்பாட்டில் 9 ஆவது சரத்தின் விதிகளுக்கு அமைவாக செயற்பாடுகளை தடுத்தல் மற்றும்ஒடுக்குதல், தண்டனை வழங்குதல் உள்ளிட்டபொருத்தமான உடனடி, நிர்வாக மற்றும்ஏனைய செயற்பாடுகளை உள்ளடக்கிய இணக்கப்பாட்டை நடைமுறைப்படுத்துவதற்கான அரசியல் யாப்பைதயாரிப்பது இலங்கையினால் மேற்கொள்ளப்பட வேண்டும்.

இதற்கமைவாக தற்பொழுது சட்ட மூல வரைவு பிரிவினால் தயாரிக்கப்பட்டுள்ளதிருத்த சட்டமூலம் தொடர்பில் சட்டமா அதிபரினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அதானிப்புகளைஉள்ளடக்கி அதன் திருத்த சட்டமூலத்தை தயாரிக்கும் பணிகளை பூர்த்தி செய்வதற்காக சட்டதிருத்த வரைபு பிரிவிற்கு ஆலோசனை வழங்குவதற்காக நீதி அமைச்சர் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.