
தேசிய போக்குவரத்து மருத்துவ நிலையத்தின் அலுவலகங்களை அதிகாலை5.30 மணிக்கு திறப்பதற்கு தீர்மானம்!
தேசிய போக்குவரத்து மருத்துவ நிலையத்தின் அலுவலகங்களை அதிகாலை5.30 மணிக்கு திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தேசிய போக்குவரத்து மருத்துவ நிலையத்தின் தலைவர், டொக்டர் எஸ். கமகே இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். சேவை பெறுநர்கள் அதிகாலை 5.30 மணி முதல் மருத்துவ பரிசோதனைக்கான சேவையை பெற்றுக்கொள்ள முடியும்எனவும் அவர் கூறியுள்ளார்.
காலை 7.30 மணி முதல் மருத்துவ அறிக்கையை விநியோகிக்க முடியும் எனவும்அவர் குறிப்பிட்டார்.
எதிர்வரும் இரண்டு மாதங்களுக்குள் நாடு முழுவதும் இந்த செயற்றிட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.குருநாகல், புத்தளம், கண்டி, அநுராதபுரம், நுகேகொடை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அலுவலகங்களில் இந்த செயற்றிட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.