26 வருடங்களுக்கு பின்னர் திறக்கப்படவுள்ள தொழிற்சாலை

26 வருடங்களுக்கு பின்னர் திறக்கப்படவுள்ள தொழிற்சாலை

26 வருடங்களாக மூடப்பட்டுள்ள கந்தளாய் சீனி கைத்தொழிற்சாலையை மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுப்பதாக இராஜாங்க அமைச்சர் ஜானக்க வக்கும்புர தெரிவித்துள்ளார். அதன் தற்போதைய நிலைமைகள் குறித்து கண்காணிக்கப்பட்டதையடுத்தே அவர் இதனை தெரிவித்தார்.

1960ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட கந்தளாய் சீனி தொழிற்சாலை 21 ஏக்கர் விஸ்தீரணத்தை கொண்ட நிலப்பரப்பில் அமைந்துள்ளது.

நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமார் 5000 தொழில்வாய்ப்புக்களை உருவாக்கிய இந்த தொழிற்சாலையானது நாட்டுக்கு பெரும் வளமாக காணப்பட்ட போதிலும் 26 ஆண்டுகாலமாக பலரினது வருமானத்தை இழக்கச் செய்யும் வகையில் மூடப்பட்டிருந்தது.

தற்போது அங்கு பாதுகாப்பு கடமைகளில் 34 பேர் சேவையில் ஈடுபட்டுள்ளதுடன், அவர்களுக்கு உரிய முறையில் சம்பளம் கிடைப்பதில்லையெனவும் இராஜாங்க அமைச்சர் ஜானக்க வக்கும்புரவிடம் அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடந்த அரசாங்கத்தில் மேற்கொள்ளப்பட்ட உடன்படிக்கை மூலம் கம்பனியொன்றுக்கு இதனை ஒப்படைத்ததன் மூலம் பாரிய நஸ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் ஜானக்க வக்கும்புர இதன்போது தெரிவித்தார்.