6ஆம் தர மாணவரை சரமாரியாக தாக்கிய ஆசிரியர்- மாத்தறையில் சம்பவம்

6ஆம் தர மாணவரை சரமாரியாக தாக்கிய ஆசிரியர்- மாத்தறையில் சம்பவம்

மாத்தறை-ரொட்ம்ப பிரதேசத்தில் 6ஆம் தரத்தில் கல்வி பயிலும் மாணவர் ஒருவருக்கு, தனியார் வகுப்பொன்றில் கல்வி பயிற்றுவிக்கும் ஆசிரியர் ஒருவர் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக குறித்த மாணவரின் தந்தை குற்றம் சாட்டியுள்ளார்.

கல்வி நடவடிக்கைகளுக்காக சக மாணவருடன் கலந்துரையாடலில் தனது மகன் பேசிக்கொண்டிருந்த போதே குறித்த ஆசிரியர் இவ்வாறு தாக்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்நிலையில் தாக்குதலுக்கு உள்ளான மாணவர் தற்போது மாத்தறை மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

 சம்பந்தப்பட்ட தனியார் வகுப்பு ஆசிரியர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளதாக ரொடும்ப காவல்துறையினர் தெரிவித்தனர்.