கடலுக்கு நீராடச் சென்ற இளைஞன் நீரில் மூழ்கி மாயம்

கடலுக்கு நீராடச் சென்ற இளைஞன் நீரில் மூழ்கி மாயம்

களுத்துறை கடலில் நீராடச் சென்ற நபரொருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.
 
குறித்த நபரைத் தேடும் பணியை தற்போது கடற்படை மற்றும் காவல்துறையினர் இணைந்து மேற்கொண்டுள்ளனர்.
 
26 வயதுடைய களுத்துறை பகுதியில் வசித்து வரும் நபர் ஒருவரே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
 
இவர் மேலும் 5 பேருடன் குறித்த கடலுக்கு நீராடச் சென்றுள்ளபோதே இவ்வாறு நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.