மத்திய கிழக்கு நாடுகளுக்கு அனைத்து விமான சேவைகளையும் ரத்து செய்த இலங்கை!

மத்திய கிழக்கு நாடுகளுக்கு அனைத்து விமான சேவைகளையும் ரத்து செய்த இலங்கை!

மத்திய கிழக்கில் தீவிரமடைந்துள்ள போர் மோதல்கள் காரணமாக, கொழும்பு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்குப் பயணிக்கவிருந்த அனைத்து விமான சேவைகளும் இன்றைய தினமும் (02) இரத்துச் செய்யப்பட்டுள்ளன.

மத்திய கிழக்கில் போர் மோதல்கள் ஆரம்பித்த கடந்த 28ஆம் திகதி முதல் இதுவரை, மத்திய கிழக்கிலிருந்து இலங்கைக்கு வரவிருந்த மற்றும் இங்கிருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்குப் பயணிக்கவிருந்த 115 விமான சேவைகள் முற்றாக இரத்துச் செய்யப்பட்டுள்ளதாகக் கட்டுநாயக்க விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மத்திய கிழக்கு நாடுகளுக்கு அனைத்து விமான சேவைகளையும் ரத்து செய்த இலங்கை! | Flight Services To Middle East Cancelled Colombo