ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் 24 மணித்தியால நீர்வெட்டு !

ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் 24 மணித்தியால நீர்வெட்டு !

ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் சில பிரதேசங்களுக்கு நாளை (புதன்கிழமை) முற்பகல் 6 மணி முதல் 24 மணித்தியால நீர் வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளது.

அதன்படி, தெஹிகஹலந்த, மிரிஜ்ஜவில, சிசிபசகம, கொடவாய, மானஜ்ஜாவ மற்றும் கீழ் பெரகம ஆகிய பிரதேசங்களுக்கு நீர் வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

அம்பலாந்தொட்டை நீர் வழங்கல் முறைமைக்கு சொந்தமான அம்பலாந்தொட்டையில் இருந்து ஹம்பாந்தோட்டை வரை நீரை கொண்டு செல்லும் குழாயினை, ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் இருந்து வரும் குழாயுடன் இணைக்கும் செயற்பாடு காரணமாக இவ்வாறு நீர்வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளது.