மேலதிக வகுப்பிற்கு சென்ற மாணவி எங்கே....? காவல் துறையினர் தீவிர விசாரணை...!

மேலதிக வகுப்பிற்கு சென்ற மாணவி எங்கே....? காவல் துறையினர் தீவிர விசாரணை...!

தெனியாய - இந்துருதெனிய பிரதேசத்தில் வசிக்கும் மாணவி ஒருவர் காணாமல் போயுள்ளார் என மாணவியின் பெற்றோரால் காவல் துறையினரிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.

மாத்தறை நகரிற்கு மேலதிக வகுப்பிற்காக சென்று தங்குமிடத்திற்கு திரும்பாத நிலையிலேயே குறித்த 17 வயது மாணவி காணாமல் போயுள்ளார்.

எனினும் இது தொடர்பில் பிரத்தியேக வகுப்பு ஆசிரியர்களிடம் காவல் துறையினர் விசாரணைகளை மேற்கொண்ட போது, குறித்த மாணவி வகுப்பு நிறைவடைந்து தங்குமிடத்திற்கு திரும்பிவிட்டார் என ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.

மாணவி தொடர்பில் இதுவரை எந்தவித தகவல்களும் கிடைக்கப்பெறாத நிலையில் காவல் துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.