கனேடிய அரசு 2இலட்சத்து 25ஆயிரத்து 130 அமெரிக்க டொலர்களை இலங்கைக்கு வழங்க தீர்மானம்

கனேடிய அரசு 2இலட்சத்து 25ஆயிரத்து 130 அமெரிக்க டொலர்களை இலங்கைக்கு வழங்க தீர்மானம்

கனேடிய அரசு இலங்கைக்கு  2 இலட்சத்து 25 ஆயிரத்து 130 அமெரிக்க டொலர்களை வழங்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பெண்களின் உரிமைகளை மேம்படுத்துவதற்காகவும், இலங்கையில் பெண்களின் அதிகாரம், பாலின சமத்துவத்தை மேம்படுத்துவதற்காக செயற்படும் உள்ளூர் மற்றும் பிராந்திய பெண்கள் அமைப்புகள் மற்றும் இணைய சேவைகளை ஆதரிப்பதற்காக கனேடிய அரசாங்கம் 225,130 அமெரிக்க டொலர்களை வழங்க திட்டமிட்டுள்ளது.

இந்த திட்டம் கனடாவின் பெண்கள் குரல் மற்றும் தலைமைத்துவ திட்டத்தின் ஒரு பகுதியாகும்.

இலங்கையில் பாதிக்கப்படக்கூடிய, ஓரங்கட்டப்பட்ட பெண்கள் மற்றும் சிறுமிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் சுமார் 15 முதல் 20 பெண்கள் உரிமை அமைப்புகளுக்கு, கனேடிய அரசு பல ஆண்டுகளாக நிதியை வழங்குகிறது.

அதன்படி இலங்கைக்கு அதிகபட்ச பங்களிப்பாக, 2019- 2023 வரையான காலப்பகுதிக்குள் 3,000,000 அமரிக்க டொலர்களை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

புதுமையான யோசனைகள் மற்றும் நிறுவனங்களின் திறனை வளர்த்தல், நிறுவனங்களுக்கிடையில்  இணைப்பினை  ஏற்படுத்துதல் மற்றும் கூட்டணியை உருவாக்குதல் ஆகிய செயற்பாடுகளுக்கு கனடாவின் பெண்கள் குரல் அமைப்பு துணைபுரிகின்றது.