அரசியலமைப்பில் மேலும் சில திருத்தங்கள் : சட்டமா அதிபர் அறிவிப்பு!

அரசியலமைப்பில் மேலும் சில திருத்தங்கள் : சட்டமா அதிபர் அறிவிப்பு!

20 ஆவது திருத்த சட்டமூலத்தில், மேலும் சில திருத்தங்களை முன்வைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக சட்டமா அதிபர் நீதிமன்றத்தில் அறிவித்துள்ளார்.

இதன்படி, குறித்த மேலதிக திருத்தங்கள் நாடாளுமன்ற அமர்வின் போது முன்வைக்கப்படவுள்ளதாக சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

20 ஆவது திருத்த சட்டமூலத்தை ஆட்சேபித்து, உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் தற்போது பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு வருகின்ற நிலையிலேயே, சட்டமா அதிபர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தாக்கல் செய்யப்பட்டுள்ள அனைத்து மனுக்களினதும் பிரதிவாதியாக சட்டமா அதிபர் பெரியடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.