நாட்டில் தேங்காய்க்கான தட்டுப்பாடு ஏற்படவில்லை – வர்த்தக அமைச்சு
நாட்டில் தேங்காய்க்கான தட்டுப்பாடு ஏற்படவில்லை என வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், தேங்காய் இறக்குமதிக்கான எவ்வித திட்டமும் இல்லை என அமைச்சின் செயலாளர் பத்ராணி ஜயவர்தன குறிப்பிட்டார்.
இதேநேரம், தட்டுப்பாடு நிலவுவதாக தெரிவித்து தேங்காய் விலையை அதிகரிக்க சில தரப்பினர் முயற்சிப்பதாகவும் தேங்காய்க்கு விதிக்கப்பட்டுள்ள நிர்ணய விலையை மாற்றுவதற்கான தேவை தற்போது இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அதிக விலையில் தேங்காய் விற்பனையில் ஈடுபடுவோர் தொடர்பாக ஆராய்வதற்கான சுற்றிவளைப்புகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாக நுகர்வோர் விவகார அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.
அவ்வாறான விற்பனையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.