கண்டி-பூவெலிக்கடை விவகாரம்- 5 மாடி கட்டிட உரிமையாளர் கைது

கண்டி-பூவெலிக்கடை விவகாரம்- 5 மாடி கட்டிட உரிமையாளர் கைது

கண்டி  பூவெலிக்கடை பகுதியில் 5 மாடிக் கட்டிடம் இடிந்து வீழ்ந்தமை தொடர்பில், குறித்த கட்டிடத்தின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதுவரையில் உரிய முறையில் விசாரணைகள் இடம்பெறவில்லை என சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்களும், பிரதேசவாசிகளும் குற்றம் சுமத்தியிருந்த நிலையிலேயே தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த அனர்த்தத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய் தந்தை, ஒன்றரை மாத குழந்தை ஆகியோர் பலியானமை குறிப்பிடத்தக்கது.