
கொழும்பில் நடைபெற்ற சீனாவின் 71ஆவது தேசிய தின கொண்டாட்டங்கள்
இலங்கையில் உள்ள சீன சங்கம் ஏற்பாடு செய்துள்ள சீனாவின் 71ஆவது தேசிய தின கொண்டாட்டங்கள் கொழும்பில் நேற்று (28) இடம்பெற்றது.
இதில் பிரதம அதிதியாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கலந்துக்கொண்டிருந்தார்.
இந்நிலையில் சீன அராச்ஙகத்தினால் ஏற்பாடு செய்திருந்த ஆசிய பிராந்திய காடசாலை மட்டங்களிலான ஓவியப் போட்டிகளில் முதலாமிடம் இரண்டாமிடம் மற்றும் மூன்றாமிடம் பெற்ற மாணவர்களுக்கான சான்றிதல்களையும் பிரதமர் இதன்போது வழங்கி வைத்தார்.
மேலும், குறித்த நிகழ்வில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த பாடசாலை மாணவர்கள் வரைந்த ஓவியங்களையும் பிரதமர் இதன்போது பார்வையிட்டார்.
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு சீனாவில் உள்நாட்டுப் போர் நடந்தது. பொதுவுடமைவாதிகள் வெற்றிபெற்றுப் போர் முடிவுக்கு வந்து, தேசியவாதிகள் தாய்வானுக்குப் பின்வாங்கியதும், சீன மக்கள் குடியரசின் அரசாங்கம் நிறுவப்பட்டுள்ளதாகத் தலைவர் மா சே துங் 1949 ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் முதல் நாளன்று தியென் ஆன் மென் வாயிற்கோபுரத்தில் அறிவித்தார்.
இதுவே அந்நாட்டின் தேசிய தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.