42 வருடங்களின் பின் புதிய அரசியலமைப்பை உருவாக்க தயாராகும் இலங்கை அரசாங்கம்
இன்னும் 06 மாதங்களுக்குள் இலங்கையில் புதிய அரசியலமைப்பிற்கான அடிப்படை வரைபு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.
அத்துடன் இந்த அரசியலமைப்புத் திருத்தமானது தற்காலிகமே.
42 வருடங்களின் பின் புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கு அரசாங்கம் தயாராக உள்ளது என்று அவர் தெரிவித்தார்
கொழும்பில் இன்று பகல் நடந்த ஊடக சந்திப்பில் அவர் இந்த தகவலை அவர் வெளியிட்டார்.
இந்த 20ஆவது புதிய அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்திற்கு எதிரணியிலுள்ள பலரும் ஆதரவளிப்பதற்கு விருப்பம் வெளியிட்டிருப்பதாகவும் கூறினார்.