ஈரானுடன் பேச்சுவார்த்தை: ட்ரம்ப் வெளியிட்ட முக்கிய தகவல்!

ஈரானுடன் பேச்சுவார்த்தை: ட்ரம்ப் வெளியிட்ட முக்கிய தகவல்!

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தைகளில் இரு நாடுகளும் ஈடுபட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். 

இருப்பினும், ஒரு ஒப்பந்தத்திற்கு வர ஈரான் இன்னும் தயாராகவில்லை என்பதை அவர் மீண்டும் வலியுறுத்தினார். 

வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், "நாங்கள் அவர்களுடன் பேசி வருகிறோம். அவர்கள் மிகவும் தீவிரமாக இருப்பதாகவே நான் நினைக்கிறேன். இதுவரை நாங்கள் பார்த்ததை விட அவர்கள் இப்போதுதான் அதிக தீவிரத்துடன் செயல்படுகிறார்கள் என்று நான் கருதுகிறேன். ஆனால், அதற்காக நாம் ஒரு உடன்பாட்டை எட்டிவிடுவோம் என்று அர்த்தமல்ல. என்ன நடக்கிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்," என்று கூறினார்.