ஸ்ரீலங்காவில் தனிமைப்படுத்தப்பட்ட துறைமுக ஊழியர்கள் - இராணுவத் தளபதி அறிவிப்பு

ஸ்ரீலங்காவில் தனிமைப்படுத்தப்பட்ட துறைமுக ஊழியர்கள் - இராணுவத் தளபதி அறிவிப்பு

இந்திய எண்ணெய் கப்பல் ஒன்றில் கொரோனா நோயாளிகள் இருந்தமை உறுதிப்படுத்தப்பட்டது. மேலும் குறித்த கப்பல் கொழும்பு துறைமுகத்துக்கு வந்துள்ளமையும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் கொழும்பு துறைமுகத்தைச் சேர்ந்த ஐந்து ஊழியர்களையும் குடும்பத்தவர்களையும் தனிமைப்படுத்தியுள்ளதாக கொரோனா தடுப்பு செயலணியின் தலைவரும் இராணுவத் தளபதியுமான சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அத்துடன் மருத்துவர் உட்பட ஐந்து தொழிலாளர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பிலான அனைத்து உரிய நடைமுறைகளையும் பின்பற்றியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பிட்ட கப்பல் கொழும்பு துறைமுகத்துக்கு வந்தவேளை உரிய செயற்பாடுகளுக்காக துறைமுக பணியாளர்கள் கப்பலிற்குள் சென்றனர் என இராணுவதளபதி தெரிவித்துள்ளார்.

இதனைதொடர்ந்து அவர்களையும் அவர்களது குடும்பத்தவர்களையும் தனிமைப்படுத்தியுள்ளதாக இராணுவதளபதி தெரிவித்துள்ளார்.