பிள்ளையானுக்காக வீதியில் காத்திருந்து வாழ்த்து மழை பொழிந்து வரவேற்ற மக்கள்

பிள்ளையானுக்காக வீதியில் காத்திருந்து வாழ்த்து மழை பொழிந்து வரவேற்ற மக்கள்

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு ஒருங்கிணைப்புத் தலைவராக நியமனம் பெற்றுள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி தலைவரும், பாராளுமன்ற உறுப்பினர் பிள்ளையானுக்கு அமோக வரவேற்பளிக்கப்பட்டுள்ளது.

மயிலங்கரச்சை வாழ் மக்களால் இவருக்கு வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் தெரிவிக்கும் நிகழ்வு நாவலடி மட்டக்களப்பு கொழும்பு பிரதான வீதியில் நேற்று இடம்பெற்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் வெற்றிடமாகவிருந்த மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு ஒருங்கிணைப்பு தலைவர் பதவி வெற்றிடத்திற்கான நியமனக் கடிதம் பிரதமரால் பிள்ளையானுக்கு வழங்கி வைக்கப்பட்டது.

இந்த வாரம் நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொள்ள சென்ற வேளை இந்த நியமனம் கிடைத்துள்ளது.

இதையடுத்து பாதுகாப்புடன் மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு மீண்டும் அழைத்து வரப்பட்டவேளை, மயிலங்கரச்சையில் ஒன்று கூடி காத்திருந்த மக்களால் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் தெரிவிக்கப்பட்டது.