அடைக்கல மாதா தேவாலயத்தின் திருசொரூபம் விசமிகளால் உடைப்பு
யாழ்ப்பாணம் மூன்றாம் குறுக்கு தெருவில் அமைந்துள்ள அடைக்கல மாதா தேவாலயத்தின் திருசொரூபம் இனந்தெரியாத நபரால் உடைக்கப்பட்டுள்ளது. கோவிலின் மூலையில் அமைக்கப்பட்டிருந்த குறித்த சொரூபம் மக்களின் வழிபாட்டுக்காக வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று காலையில் உடைக்கப்பட்டுள்ளது.
புலம்பெயர் நாட்டிலிருந்து வருகை தந்த ஒருவராலேயே சிலை உடைக்கப்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது. தற்போது மாதாவின் சொரூபம் பாதுகாப்பு நலன் கருதி அடைக்கல மாதா ஆலயத்தின் உட்பகுதிக்குள் கொண்டுசென்று வைக்கப்பட்டுள்ளது. குறித்த நபரை யாழ்ப்பாணம் பொலிஸார் கைது செய்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.