கிளிநொச்சி-பூநகரி-அரசபுரம் வனப்பகுதியில் முதிரைமரக் குற்றிகளுடன் 2 பேர் கைது

கிளிநொச்சி-பூநகரி-அரசபுரம் வனப்பகுதியில் முதிரைமரக் குற்றிகளுடன் 2 பேர் கைது

கிளிநொச்சி - பூநகரி - அரசபுரம் வனப்பகுதியில் இருந்து சட்டவிரோதமாக பாரவூர்தியில் கடத்திச் செல்லப்பட்ட முதிரைமரக் குற்றிகளுடன் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தகவல் ஒன்றுக்கு அமைய இன்று அதிகாலை முன்னெடுத்த சோதனை நடவடிக்கையின் போது சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த மரக்குற்றிகள் யாழ்ப்பாணத்திற்கு கொண்டு செல்லப்படவிருந்தாக காவல்துறையினரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

கடந்த 3 மாதங்களாக இந்த மோசடி இடம்பெற்றுள்ள நிலையில், பளை மற்றும் யாழ்ப்பாண பகுதிகளை சேர்ந்தவர்களே சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளனர்.