இந்தியாவில் 10 ஆயிரத்தை நெருங்கும் கொரோனா உயிரிழப்பு!

இந்தியாவில் 10 ஆயிரத்தை நெருங்கும் கொரோனா உயிரிழப்பு!

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் அதிகம்பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில் மொத்த பாதிப்பு 3 இலட்சத்து 20 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.

இதன்படி, மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், 11 ஆயிரத்து 929 பேருக்கு கொரோனா தொற்று நேற்று கண்டறியப்பட்ட நிலையில் மொத்த பாதிப்பு 3 இலட்சத்து 20 ஆயிரத்து 922 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நேற்று மட்டும் 311 பேர் உயிரிழந்துள்ளதுடன் மொத்த மரணங்கள் 9 ஆயிரத்து 195 ஆகப் பதிவாகியுள்ளது. இதேவேளை, நாடு முழுவதும் ஒரு இலட்சத்து 49 ஆயிரத்து 348 பேர் சிகிச்சை பெற்று வருவதுடன் ஒரு இலட்சத்து 62 ஆயிரத்து 379 பேர் சிகிச்சைக்கு பின்னர் வீடு திரும்பியுள்ளனர்.

மகாராஷ்ட்ரா மாநிலத்தில் அதிகபட்சமாக பாதிப்பு எண்ணிக்கை ஒரு ஒலட்சத்து 4 ஆயிரத்து 568 ஆகப் பதிவாகியுள்ளதுடன் அங்குமட்டும் இதுவரை 3 ஆயிரத்து 830 பேர் மரணித்துள்ளனர். இரண்டாவது இடத்தில் தமிழகம் உள்ள நிலையில் அங்கு பாதிப்பு எண்ணிக்கை 42 ஆயிரத்து 687 ஆக அதிகரித்துள்ளதுடன் உயிரிழப்புக்கள் 397ஆகப் பதிவாகியுள்ளன.

இதையடுத்து, டெல்லியில் 38 ஆயிரத்து 958 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மொத்த உயிரிழப்பு ஆயிரத்து 271 ஆகக் காணப்படுகின்றது. மேலும், குஜராத் மாநிலத்தில் 23 ஆயிரத்து 38 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதுடன் ஆயிரத்து 448 பேர் மரணித்துள்ளனர்.