சிவன் ஆலய முன்றலில் குவிக்கப்பட்டுள்ள பொலிஸார்! போராட்டக்காரர்களை படம் பிடித்ததாக தகவல்

சிவன் ஆலய முன்றலில் குவிக்கப்பட்டுள்ள பொலிஸார்! போராட்டக்காரர்களை படம் பிடித்ததாக தகவல்

சாவகச்சேரி சிவன் ஆலய முன்றலில் இடம்பெறும் உண்ணாவிரதப் போராட்டத்தில் 200 க்கும் அதிகமானவர்கள் கலந்துகொண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் குறித்த போராட்டத்துக்கு பெருந்தொகையானவர்கள் வந்துகொண்டிருப்பதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

இதேவேளையில் அப்பகுதியில் பொலிஸார் பஸ்களில் கொண்டுவரப்பட்டு குவிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளவர்களிடம் விசாரணைகளை நடத்தியுள்ளார்கள்.

எதற்காக இங்கு கூடியுள்ளீர்கள்? என அவர்களிடம் பொலிஸார் கேள்வி எழுப்பிய போது, “அரசாங்கத்தின் அடக்குமுறைக்கு எதிராக” என அவர்கள் பதிலளித்துள்ளார்கள்.

அதேவேளையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களின் பெயர் விபரங்களைச் பொலிஸார் சேகரித்ததாகவும் குறிப்பிடப்படுகின்றது.

போராட்டக்காரர்களை காணொளியில் படம் பிடித்துள்ளார்கள். தொடர்ந்தும் அப்பகுதியில் பெருமளவு பொலிஸார் நிற்கின்ற போதிலும், உண்ணாவிரதப் போராட்டம் அமைதியாக இடம்பெறுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.