பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் மறைவுக்கு நகைச்சுவை நடிகர் சூரி இரங்கல் தெரிவித்து உள்ளார்.
உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் இன்று பிற்பகல் 1.04 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 74. எஸ்.பி.பி.யின் திடீர் மறைவு திரையுலகினரிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. பிரபலங்கள் பலரும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், பிரபல நகைச்சுவை நடிகர் சூரி எஸ்.பி.பி.யின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் டுவிட்டரில், “கும்பிட்ட சாமி அத்தனையும் இப்படி கூண்டோட கைவிட்ருச்சே. ஆழ்ந்த இரங்கல்கள் சார்” என பதிவிட்டுள்ளார். கடந்த மாதம் எஸ்.பி.பி குணமடைய வேண்டி திரைப்பிரபலங்கள் அனைவரும் கூட்டுப் பிரார்த்தனை செய்தது குறிப்பிடத்தக்கது.