தேசிய பாதுகாப்பு மைத்திரியின் கையிலிருந்தும் அவர் சரியாக செயல்படவில்லை! பகிரங்க குற்றச்சாட்டு

தேசிய பாதுகாப்பு மைத்திரியின் கையிலிருந்தும் அவர் சரியாக செயல்படவில்லை! பகிரங்க குற்றச்சாட்டு

தேசிய பாதுகாப்பானது மைத்திரியின் கையில் இருந்தது. எனினும் அந்த நேரத்தில் அவர் வெளிநாடு சென்று தனது வேலையைச் சரியாகச் செய்தார் என்று நான் நினைக்கவில்லை என்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் துணைத் தலைவர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணையகத்தின் முன் நேற்று சாட்சியங்களை வழங்கிய பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது பேசிய அவர்,

“பாதுகாப்பு அமைச்சராக இருந்த முன்னாள் ஜனாதிபதி, ஈஸ்டர் தாக்குதலுக்கு முன்னர் வெளிநாடு சென்றதன் ஊடாக தனது பொறுப்பை புறக்கணித்துள்ளார்.

எனக்கு வழங்கப்பட்ட நிறுவனங்கள் வர்த்தமானியில் இருந்து ஒரு தனி அமைச்சுக்களாக செயல்பட்டன, எனக்கு ரணவீரு ஆணையகம், பாதுகாப்பு பள்ளி, பாதுகாப்பு பணியாளர்கள் கல்லூரி ஆகியவைகளுக்கே பொறுப்பு வழங்கப்பட்டிருந்தது.

இந்த நான்கு விடயங்களுக்கு மாத்திரமே கடந்த ஆட்சி காலத்தில் எனக்கு வர்த்தமானியில் பொறுப்புக்கள் வழங்கப்பட்டிருந்தன.

பொலிஸ்துறை, உளவுத்துறை மற்றும் ஆயுதப்படைகள் என் கட்டுப்பாட்டிற்குள் வரவில்லை.

எனவே நாட்டின் பாதுகாப்பு என் கைகளில் இருந்தது. ஆனால் நாட்டின் பாதுகாப்பு விவகாரத்தில் இரண்டாவது இடத்தில் இருந்தேன் என்று என்னால் கூற முடியாது.

தேசிய பாதுகாப்பு அப்போதைய ஜனாதிபதியின் கையில் இருந்தது. அந்த நேரத்தில் அவர் வெளிநாடு சென்று தனது வேலையைச் சரியாகச் செய்தார் என்று நான் நினைக்கவில்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.