
ஸ்ரீலங்காவில் உயரமான கட்டடங்களை ஆய்வு செய்யவுள்ள ட்ரோன்
ஸ்ரீலங்காவில் டெங்கை கட்டுப்படுத்தும் வகையில் உயரமான கட்டடங்களை ஆய்வு செய்ய விமானப்படை ட்ரோன் கமராக்களைப் பயன்படுத்தவுள்ளதாக சுகாதாரதுறையின் தலைமை மருத்துவ அதிகாரி இந்திக எல்லாவல தெரிவித்தார்.
இந்த ஆரம்ப நிகழ்வுக்கு முன்னாள் விமானப்படை தளபதியும் தற்போதைய மேல் மாகாண ஆளுநருமான ரொஷான் குணதிலக தலைமை தாங்கினார்.
பிலியந்தல பகுதியில் உள்ள உயரமான கட்டடங்களில் உள்ள நீரை கண்டுபிடித்து அழிக்க ட்ரோன் கமராக்கள் பயன்படுத்தப்படும் என்றும், எதிர்காலத்தில், கொழும்பில் உள்ள கட்டடங்களை ஆய்வு செய்ய ட்ரோன் கமரா தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த விமானப்படை திட்டமிட்டுள்ளது என்றும் இந்திக எல்லாவல மேலும் தெரிவித்தார்.