ஸ்ரீலங்காவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள ரஷ்ய பிரஜை! இராணுவத் தளபதி வெளியிட்ட செய்தி

ஸ்ரீலங்காவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள ரஷ்ய பிரஜை! இராணுவத் தளபதி வெளியிட்ட செய்தி

ரஷ்யாவிலிருந்து வந்த பயணிகள் எங்கு தங்கவைக்கப்பட்டுள்ளனர் என்ற விபரங்களை அதிகாரிகள் கொவிட் 19 தொடர்பான செயலணிக்கு தெரிவிக்கவில்லை என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா குறிப்பிட்டுள்ளார்.

ரஸ்யாவிலிருந்து வந்த பயணியொருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளமை குறித்து கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

வெளிநாட்டிலிருந்து வருபவர்கள் வழமையாக அவர்களுக்கு என ஒதுக்கப்பட்ட ஹோட்டல்களில் தங்கவைக்கப்படுவது வழமை.

எனினும் இது தொடர்பில் எங்களுக்கு எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

குறித்த நபருடன் விமானத்தில் வந்தவர்கள் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பாமல் மாத்தறைக்கு செல்ல அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் குறித்த நபர் மூலம் ஏனையவர்களுக்கு கொரோனா தொற்றுவதற்கான வாய்ப்பு குறைவு எனவும் இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.

இதேவேளை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள ரஸ்ய பிரஜை குறித்து அதிகாரிகள் பொதுசுகாதார பரிசோதகர்களுக்கு எந்த தகவலையும் வழங்கவில்லை என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

குறிப்பிட்ட ரஸ்ய பிரஜை விமான நிலையத்தின் கட்டுப்பாடுகளை பின்பற்றாமல் பல பகுதிகளுக்கு சென்றுள்ளார் என பொதுசுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.