ஸ்ரீலங்காவில் ஜனவரி முதல் விதிக்கப்படவுள்ள தடை -வெளிவந்தது விபரம்

ஸ்ரீலங்காவில் ஜனவரி முதல் விதிக்கப்படவுள்ள தடை -வெளிவந்தது விபரம்

ஸ்ரீலங்காவில் எதிர்வரும் ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் பிளாஸ்டிக் பொருட்கள் சிலவற்றுக்கு தடை விதிக்கப்படவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

இதன்படி கொட்டன் பட்டன், கிருமி நாசினி அடங்கிய பிளாஸ்டிக் போத்தல், சஷே பைக்கட்டுக்கள் என்பனவே தடை செய்யப்படவுள்ளதாக சுற்றாடல்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

இவை மீது தடை விதிக்கப்படுவது உறுதி என்பதால், மாற்று உற்பத்திகளை மேற்கொள்ளுமாறு உற்பத்தியாளர்களுக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார்.

இதேவேளை அடுத்தவருடத்தில் மேலும் பல பிளாஸ்டிக் பொருட்கள் மீது தடை விதிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.