இன்றைய ராசி பலன்கள் 25/09/2020

இன்றைய ராசி பலன்கள் 25/09/2020

மேஷம்

மேஷம்: குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கணவன்-மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு கணிசமாக உயரும். உத்தியோகத்தில் நடைமுறை சிக்கல்கள் தீரும். புத்துணர்ச்சி பெருகும் நாள்.


ரிஷபம்

ரிஷபம்: சந்திராஷ்டமம் இருப்பதால் சிலர் உங்களை சீண்டிப் பார்ப்பார்கள். உடனே உணர்ச்சிவசப்பட்டு கத்தாதீர்கள். குடும்பத்திலுள்ளவர்களிடம் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. வியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடி விற்பீர்கள்.  உத்தியோகத்தில் அதிகரிகளுடன்  ஈகோ பிரச்சினை வந்து போகும். வேலைச்சுமை மிகுந்த நாள்.


மிதுனம்

மிதுனம்: பிள்ளைகள் உங்கள் பேச்சிற்கு மதிப்பளிப்பார்கள். ஆடை ஆபரணம் சேரும். தாயாரின் உடன் நிலை சீர் ஆகும். கடினமான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். திறமைகள் வெளிப்படும் நாள்.


கடகம்

கடகம்: அரசால் அனுகூலம் உண்டு. உங்களால் மற்றவர்கள் பயனடைவார்கள். எதிர்பாராத பணவரவு உண்டு. பழைய உறவினர் நண்பர்கள் தேடி வந்து பேசுவார்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்தியோகத்தில் உயரதிகாரி அதிசயிக்கும் படி நடந்து கொள்வீர்கள். திடீர் யோகம் கிட்டும் நாள்.


சிம்மம்

சிம்மம்: உங்களை சுற்றி இருப்பவர்களைப் புரிந்து கொள்வீர்கள். அக்கம்  பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். நட்பால் ஆதாயம் உண்டு.  வியாபாரத்தில் நெளிவு சுழிவுகளை கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். கனவு நனவாகும் நாள்.


கன்னி

கன்னி: திட்டமிட்ட காரியங்கள் தடையின்றி முடியும். வாகனத்தை சீர் செய்வீர்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். தாயாருக்கு மருத்துவ செலவுகள் வரக் கூடும். வியாபாரத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். உழைப்பால் உயரும் நாள்.


துலாம்

துலாம்: உடன் பிறந்தவர்கள் உங்கள் வளர்ச்சிக்கு சாதகமாக இருப்பார்கள். அரசால் ஆதாயம் உண்டு. துணிச்சலாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்தியோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். வெற்றிக்கு வித்திடும் நாள்.


விருச்சிகம்

விருச்சிகம்: இதுவரை எதிர்மறையாக இருந்த சூழலில் அனைத்தும் சாதகமாக மாறும். மன உளைச்சல் அனைத்தும் நீங்கி தெளிவு பிறக்கும். குடும்பத்தில் அமைதி திரும்பும். செலவுகளை குறைக்க திட்டமிடுவீர்கள். அரைகுறையாக நின்ற வேலைகள் உடனே முடியும். உடல் நலம் சீராகும். அலுவலகத்தில் மரியாதை கூடும். மகிழ்ச்சியான நாள்.


தனுசு

தனுசு: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் தோல்வி மனப்பான்மையால் மன இறுக்கம் அதிகரிக்கும். மற்றவர்களுக்காக நியாயம் கேட்க போய் பெயரை கெடுத்து கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம். உத்தியோகத்தில் கூடுதலாக வேலைப் பார்க்க வேண்டி வரும்.  விட்டுக் கொடுத்துப் போக வேண்டிய நாள்.


மகரம்

மகரம்: எதிர்காலம் பற்றிய பயம் டென்ஷன் வந்து நீங்கும். பிள்ளைகளின் பிடிவாத போக்கை அனுசரணையான பேச்சால் சரிசெய்யுங்கள். முக்கிய கோப்புகளை கையாளும் போது அலட்சியம் வேண்டாம். வாகனம் பழுதாகும். வியாபாரத்தில் போராடி லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் பிரச்சினைகள் வரக்கூடும்.  விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள்.


கும்பம்

கும்பம்: எதையும் சமாளிக்கும் சாமர்தியம் பிறக்கும். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். எதிர்பாராத சந்திப்பு நிகழும். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். மதிப்புக் கூடும் நாள்.


மீனம்

மீனம்:  உறவினர்கள் நண்பர்கள் ஆதரவாகப் பேசத் தொடங்குவார்கள். விஐபிகள் உதவுவார்கள். உங்களின் அணுகுமுறையை மற்றவர்களின் ரசனைக்கேற்ப மாற்றியமைத்து கொள்வீர்கள். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் உண்டு. உத்தியோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். சாதித்து காட்டும் நாள்.