கொரோனா தொடர்பில் சற்று முன்னர் வெளியான செய்தி...!

கொரோனா தொடர்பில் சற்று முன்னர் வெளியான செய்தி...!

நாட்டில் நேற்று 9 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியானது.

மாலைத்தீவு, குவைட், கட்டார், மற்றும் ஐக்கிய அரபு ராச்சியத்தில் இருந்து நாடு திரும்பிய 7 பேருக்கும்; இவ்வாறு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன் நாட்டில் தங்கியிருந்த இரண்டு ஈரானிய பிரஜைகளுக்கும் கொவிட்- 19 தொற்றுறுதியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கயை நாட்டில் கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை மூவாயிரத்து 333 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, நாட்டில் கொவிட்-19 தொற்றினால் பீடிக்கப்பட்டிருந்த மேலும் 13 பேர் நேற்றைய தினம் குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறினர்.

சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு இதனை தெரிவித்துள்ளது.

இதற்கமைய, நாட்டில் இதுவரை கொவிட்-19 தொற்றினால் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3 ஆயிரத்து 142 ஆக அதிகரித்துள்ளது.

இந்தநிலையில், வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 178 ஆக குறைவடைந்துள்ளது.