இறால் வளர்ப்புத் திட்டத்தின் ஊடாக சூழலுக்கு எந்தவிதப் பாதுகாப்பும் இல்லை:ஜயந்தி விஜேரத்ன கருத்து!

இறால் வளர்ப்புத் திட்டத்தின் ஊடாக சூழலுக்கு எந்தவிதப் பாதுகாப்பும் இல்லை:ஜயந்தி விஜேரத்ன கருத்து!

இலங்கை தேசிய நீர் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகார சபையினுடாக மேற்கொள்ளப்பட்டு வரும் உவர் நீர் இறால் வளர்ப்புத் திட்டத்தின் ஊடாக சூழலுக்கு எந்தவிதப் பாதுகாப்பும் இல்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இலங்கை தேசிய நீர் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் ஜயந்தி விஜேரத்ன வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே, இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏற்றுமதியை இலக்காக கொண்டு, அதிகார சபையினூடாக மேற்கொள்ளப்பட்டு வரும் உவர் நீர் இறால் வளர்ப்புத் திட்டத்தின் ஊடாக, சூழலுக்கு பாதிப்பு ஏற்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையிலேயே, அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், தமது அதிகார சபையினூடாக மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டங்களின் ஊடாக எந்த வகையிலும் சூழலுக்கு பாதிப்பு ஏற்பட இடமளிக்கப் போவதில்லை என ஜயந்தி விஜேரத்ன சுட்டிக்காட்டியுள்ளார்.

கடற்றொழில் மற்றும் நீரியல் வள அமைச்சின் கீழ் இயங்கும், இலங்கை தேசிய நீர் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகார சபையினுடாக நன்னீர் மீன் மற்றும் நீர் உயிரின வளர்ப்பு முகாமைத்துவம் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.