கிளிநொச்சியில் நான்கு சிறிய வர்த்தக நிலைங்கள் உடைக்கப்பட்டு கொள்ளை!

கிளிநொச்சியில் நான்கு சிறிய வர்த்தக நிலைங்கள் உடைக்கப்பட்டு கொள்ளை!

கிளிநொச்சி- பரந்தன் சந்தைப்பகுதியில் நான்கு சிறிய வர்த்தக நிலைங்கள் உடைக்கப்பட்டு, அங்கிருந்த சில பொருட்கள் கொள்ளையிடப்பட்டுள்ளன.

பரந்தன் பொதுச்சந்தை பகுதியில் இயங்கி வரும் சிறிய பல்பொருள் வாணிபம், வெற்றிலை வாணிபம், பழக்கடை உள்ளிட்ட 04 கடைகள் நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு உடைக்கப்பட்டு, அக்கடைகளில் இருந்த  சிகரெட், பீடி, சோடா போன்ற பொருட்கள் களவாடப்பட்டுள்ளன.

குறித்த சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்