15இற்கும் மேற்பட்ட இடங்களில் பரீட்சார்த்த பொதுத்தேர்தலை நடத்த தீர்மானம்
15 இற்கும் மேற்பட்ட இடங்களில் பரீட்சார்த்த பொதுத்தேர்தலை நடத்துவதென்று தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
கொரோனா ரைவஸ் பரவலுக்கு மத்தியில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இந்த பரீட்சார்த்த பொதுத்தேர்தல் நாட்டின் அனைத்து இடங்களையும் உள்ளடக்கும் வகையில் நடத்தப்படும்.
மொனராகலையின் வெள்ளவாய, பொலன்னறுவையின் திம்புல்கல, புத்தளத்தின் கல்பிட்டி, மாத்தளையின் ரத்தோட்டை, மாத்தறையின் அக்குரஸ்ஸ, கம்பஹாவின் நீர்கொழும்பு, கொழும்பில் கொழும்பு வடக்கு மற்றும் தெமட்டகொடை ஆகிய இடங்களில் இன்று நடத்தப்படுகின்றன.
நாளையதினம் யாழ்ப்பாணம், குருநாகல், அம்பாறை, நுவரெலியா, பதுளையின் ஹப்புத்தளை, அநுராதபுரத்தின் ஹொரவப்பொத்தானை, கொழும்பின் கஹதுடுவ மற்றும் ஆகிய இடங்களில் பரீட்சார்த்த தேர்தல் நடத்தப்படவுள்ளது.
எதிர்வரும் செவ்வாய்க்கிழமையன்று முல்லைத்தீவில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.
இந்த செயற்பாடுகள் சிங்கள மற்றும் தமிழ், முஸ்லிம் சமூகங்கள் மத்தியில் நகர, கிராம மற்றும் பெருந்தோட்டப் பகுதிகளிலும் நடத்தப்படுகின்றன.
இதன்போது பெறப்படும் அனுபவத்தை கொண்டு தேர்தல் வியூகங்களில் மாற்றங்கள் அல்லது மேம்படுத்தல்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் ரசிக பீரிஷ் தெரிவித்துள்ளார்.