பிரித்தானிய பிரதமருக்கு கடிதம் அனுப்பியுள்ள நூற்றுக்கு மேற்பட்ட விளையாட்டுத்துறை அமைப்புகள்

பிரித்தானிய பிரதமருக்கு கடிதம் அனுப்பியுள்ள நூற்றுக்கு மேற்பட்ட விளையாட்டுத்துறை அமைப்புகள்

பிரித்தானியாவில் 100 இற்கும் மேற்பட்ட விளையாட்டுத்துறை அமைப்புகள், அவசர நிதி கோரி, பிரதமர் பொறிஸ் ஜொன்சனுக்கு கடிதம் அனுப்பியுள்ளன.

கொவிட்-19 தாக்கம் காரணமாக இழந்த தலைமுறை செயற்பாடுகள் தொடர்பிலும் அந்தக் கடித்தில் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளதாக சர்வதேச ஊடகம் ஒன்று குறிப்பிட்டுள்ளது.

இந்த நிலைமையில் இருந்து மீள்வதற்கு அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.

இங்கிலாந்து விளையாட்டுத்துறை, 200 மில்லியன் டொலர் நிதியை கையளித்திருந்தாலும், மேலும் நிதி அவசியம் என துறைசார் தரப்பினர் நம்பிக்கை கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேநேரம், எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதியில் இருந்து தங்களது திட்டங்களை முன்னெடுக்க அனுமதியளிக்க வேண்டும் என்றும் சில விளையாட்டு கழகங்கள் கோரிக்கை விடுத்துள்ளன