கடற்கரையில் கரையொதுங்கிய பொதி - அதிர்ந்து போன மீனவர்...!

கடற்கரையில் கரையொதுங்கிய பொதி - அதிர்ந்து போன மீனவர்...!

உடப்பு பெரியப்பாடு கடற்கரையில் கரையொதுங்கிய நிலையில் காணப்பட்ட போதை பொருள் அடங்கிய பொதி ஒன்று மீனவர் ஒருவரால் காவல் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது

ப்ரௌன் சுகர் என அழைக்கப்படும் போதை பொருளே இவ்வாறு பொதி செய்யப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக காவல் துறையினர் மேலும் தெரிவித்தனர்.

குறித்த பொதியில் ஒரு கோடிக்கும் அதிக பெறுமதியுடை ஒரு கிலோகிராம் எடைகொண்ட போதை தூள் காணப்பட்டதாக காவல் துறையினர் குறிப்பிட்டனர்.

இது தொடர்பில் காவல் துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.