உங்களுக்கு கல்யாணமே நடக்காது என சொல்லியிருந்தால் கவலையே வேண்டாம்: இந்த பரிகாரத்தை செய்யுங்கள்..
நிறைய பேருக்கு திருமணத்தில் தடை இருக்கும். சில பேருக்கு ஜாதக கட்டத்தில் திருமணம் நடக்கும் என்ற யோகம் இருந்தாலும் கூட, சில பெண்களுக்கு சீக்கிரத்தில் மாப்பிள்ளை கிடைக்காது, ஆணாக இருந்தால், திருமணம் செய்து கொள்ள, மணமகளை தேடுவதில் சிரமம் இருக்கும்.
உங்களுடைய ஜாதக கட்டத்தில், உங்களுடைய கர்ம வினைகள் மற்றும் தோஷங்களினால் திருமணத் தடை இருந்தால் கூட கவலை வேண்டாம். இந்த பரிகாரத்தை நம்பிக்கையோடு செய்யுங்கள் உங்களுக்கு நல்லபலன்கள் கிடைக்கும்.
இந்த பரிகாரத்தை திருமணமாகாத ஆண்கள் மற்றும் பெண்கள் தான், செய்ய வேண்டும் என்ற எந்த அவசியம் கிடையாது. திருமணமாகாமல் இருக்கும் ஆண்கள அல்லது பெண்களின் பெற்றோரும் செய்யலாம். உடன்பிறந்தவர்களும் செய்யலாம்.
இந்தப் பரிகாரத்தினை கட்டாயம் 9 வாரங்கள் தொடர்ந்து செய்ய வேண்டும். இடையில் ஒரு வாரம் கூட தவறக்கூடாது. இதை பரிகாரம் என்று கூட சொல்லமுடியாது. நம்பிக்கையான வழிபாடு என்றே சொல்லலாம்.
வாரம் தோறும் வரும் செவ்வாய்க் கிழமைகளில் முருகர் கோவிலுக்கு சென்று, இரண்டு நெய் தீபம் ஏற்றி வையுங்கள். அதன் பின்பு தேங்காய், வெற்றிலை, பாக்கு, பழம், போன்ற அர்ச்சனைப் பொருட்களை வழங்கி முருகப் பெருமானுக்கு அர்ச்சனை செய்ய வேண்டும்.
திருமணம் ஆகாத அந்த குறிப்பிட்ட நபரின் பெயர், இராசி மற்றும் நட்சத்திரங்களைச் சொல்லி அர்ச்சனை செய்யவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக நீங்கள் அர்ச்சனை செய்யும் பொருட்களோடு சேர்த்து, ஒரு எலுமிச்சை பழத்தை வாங்கி வைத்துக் கொள்வது அவசியம்.
அர்ச்சனை பொருட்களோடு சேர்த்து அந்த எலுமிச்சை பழத்தை கொடுப்பதற்கு முன்பு, உங்கள் உள்ளங்கைகளில் அந்த எலுமிச்சை பழத்தை வைத்து, இரு கைகளையும் கூப்பி, முருகப் பெருமானை வேண்டி, திருமண தடைகள் நீங்கி, அந்த குறிப்பிட்ட நபருக்கு திருமணம் நடக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்துகொண்டு, அந்த எலுமிச்சை பழத்தை அர்ச்சனை பையில் வைத்து விடுங்கள்.
குருக்களிடம் அந்த அர்ச்சனை பாழத்தை இறைவனின் பாதங்களில் சேர்த்து விடும்படி சொல்லுங்கள். அர்ச்சனை முடித்த பின்பு, மீண்டும் அந்தப் பழத்தை திரும்பி வாங்கிக் கொள்ள வேண்டாம்.அந்த வேண்டுதல் நிறைவேற, அந்த எலுமிச்சை பழத்தை முருகப்பெருமானின் பாதங்களிலேயே விட்டு விடுங்கள்.
தடைப்படும் திருமணம் தொடர்பான பிரச்சனையை முருகப்பெருமான் பார்த்துக் கொள்வார். ஒன்பது வாரங்களும் தொடர்ந்து இதை செய்து வர வேண்டும்.
இதுதவிர இரண்டாவதாக ஒரு பரிகாரம் உள்ளது. அதையும் தெரிந்து கொள்ளலாம். ஆனால் இந்த பரிகாரத்தை திருமணமாகாத குறிப்பிட்ட அந்த ஆணோ அல்லது பெண்ணோ தான் செய்ய வேண்டும்.திருமணம் ஆகாத ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் முருகன் கோவிலுக்கு தொடர்ந்து 6 செவ்வாய்க் கிழமைகள் சென்று, அங்கு இருக்கும் முருகப்பெருமானை, மூலவரை தரிசனம் செய்துவிட்டு, அந்த கோவிலிலேயே தனியாக, கல்யாண முருகர் என்று ஒரு சன்னிதானம் இருக்கின்றது. அந்த சன்னிதானத்தில் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும்.
திருமணம் தடைப்பட்டுக் கொண்டே இருக்கும் அந்த குறிப்பிட்ட நபர் 6 வாரங்கள் இந்த கோவிலுக்கு சென்று, கல்யாண முருகனுக்கு மாலை வாங்கி அணிவித்து, குங்கும அர்ச்சனை செய்து, கல்யாண முருகர் கழுத்திலிருந்து ஒரு மாலையை பெற்று, தன் கழுத்தில் போட்டுக்கொண்டு, இந்த முருகன் கோவிலை 6 முறை வலம் வரவேண்டும். 6 வாரங்கள் தொடர்ந்து, இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும்.
ஆறாவது வாரம் உங்களால் முடிந்த பிரசாதத்தை செய்து, பக்தர்களுக்கு கொடுத்து, பிரார்த்தனையை நிறைவு செய்துகொள்ள வேண்டும். இந்தப் பரிகாரத்தை நம்பிக்கையோடு செய்தவர்கள், யாருக்கும் திருமணமாகாமல் இருந்ததே கிடையாது. உங்களது மனதிற்கு பிடித்தமான, மணவாழ்க்கை கட்டாயம் கிடைக்கும் என்பதே நிதர்சனம்.