கொழும்பு வாழ் மக்களுக்கான ஓர் விசேட செய்தி...!
கொழும்பு நீர் பாவனையாளர் பிரிவுக்குற்பட்ட பல பகுதிகளில் நீர் வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. இதற்கமைய நாளை முற்பகல் 09 மணி முதல் நள்ளிரவு 12 மணிவரை நீர் விநியோகம் துண்டிக்கப்படும் எனவும் அந்த சபை மேலும் தெரிவித்துள்ளது.
கொழும்பு -02,03,07,08 மற்றும் 10 ஆகிய பகுதிகளில் இவ்வாறு நீர் வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளது. இதேவேளை கொழும்பு கோட்டை பகுதிகளுக்கு குறைவேகத்தில் நீர் விநியோகம் மேற்கொள்ளப்படவுள்ளதாக மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.