எதிர்வரும் 27ஆம் திகதி இலங்கை வரவுள்ள பங்களாதேஷ் அணி

எதிர்வரும் 27ஆம் திகதி இலங்கை வரவுள்ள பங்களாதேஷ் அணி

இலங்கைக்கான விஜயம் ஒன்றை பங்களாதேஷ் கிரிக்கட் அணி மற்றும் அணியின் பணியாளர்கள் மேற்கொள்வதற்கு முன்னர் இன்று முதல் டாக்காவில் உள்ள விருந்தகம் ஒன்றில் 7 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்படுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தனிமைப்படுத்தப்பட்ட காலம் நிறைவடைந்ததன் பின்னர் எதிர்வரும் 27 ஆம் திகதி விசேட வானூர்தி மூலம் இலங்கைக்கு பயணிப்பர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நீண்ட காலத்தின் பின்னர் இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணியினர் சந்திக்கவுள்ளனர்.

இரு அணிகளுக்கும் இடையே மூன்று டெஸ்ட் போட்டிகள் நடைபெறவுள்ளன.

முதலாவது போட்டி 23 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

அதேவேளை, இலங்கை தரப்பினர் 14 நாட்கள் தனிமைப்படுத்தும் நிபந்தனையினை குறைக்க வேண்டும் என பங்களாதேஷ் எதிர்பார்க்கின்றது.

இலங்கையினால் விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைக்கு அமைய வெளிநாடுகளில் இருந்து வருகை தரும் சகலரும் 14 நாள் தனிமைப்படுத்தப்படுத்தப்படுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தனிமைப்படுத்தல் நாட்களை குறைப்பதற்கான அனுமதி இலங்கையினால் வழங்கப்படாத பட்சத்தில், போட்டிகள் குறிப்பிட்ட தினங்களில் நடைபெறுவது சந்தேகம் என ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.