பெற்றோருடன் வாக்குவாதம் - உயிரை மாய்த்த இளைஞன்

பெற்றோருடன் வாக்குவாதம் - உயிரை மாய்த்த இளைஞன்

புத்தளம் - கும்புக்கல்ல பகுதியில் பெற்றோருடன் வாக்குவாதப்பட்ட இளைஞன் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த பகுதியைச் சேர்ந்த விக்ரம முதியன்சலாகே திலின பெதும் பண்டார (வயது 24) எனும் இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

வீட்டில் ஏற்பட்ட கருத்து முரண்பாடு காரணமாக மனவிரக்த்திக்கு உள்ளான குறித்த இளைஞன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட நிலையில் நேற்றையதினம் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

பிரேதப் பரிசோதனையின் பின் சடலம் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.