இன்று களம் காணும் டெல்லி - பஞ்சாப் அணிகள்: பலம், பலவீனங்கள் என்னென்ன?

இன்று களம் காணும் டெல்லி - பஞ்சாப் அணிகள்: பலம், பலவீனங்கள் என்னென்ன?

துபாயில் இன்று இரவு 7 மணிக்கு நடைபெற உள்ள போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளனர்.  டெல்லி- பஞ்சாப் அணிகள் இதுவரை 24 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் டெல்லி 10 ஆட்டங்களிலும் பஞ்சாப் 14- ஆட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.  டெல்லி அணியை ஸ்ரேயாஸ் அய்யரும் பஞ்சாப் அணியை கே.எல்.ராகுலும் வழிநடத்த உள்ளனர். இரு இளம் கேப்டன்கள் தலைமையிலான அணிகள் மோதும் போட்டி என்பதால் எதிர்பார்ப்பு அதிகமாகவே உள்ளது.

கடந்த சீசனில் பஞ்சாப் அணியை வழிநடத்திய அஸ்வின் இம்முறை டெல்லி அணிக்காக களம் காண உள்ளது, அந்த அணிக்கு கூடுதல் பலமாகும். இதேபோல் ரஹானேவின் வரவும் டெல்லி அணிக்கு நிச்சயம் வலு சேர்க்கும். தொடக்க வீரர் தவானும் நல்ல பார்மில் உள்ளார்.

 

பஞ்சாப் அணி கேப்டன் கே.எல்.ராகுல் பேட்டிங் மட்டுமல்லாது கீப்பிங்கிலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். கடந்த இரு சீசனும் பஞ்சாப் அணியில் அதிக ரன் எடுத்த வீரரும் இவர்தான்.

இவருக்கு பக்கபலமாக நின்று விளையாட மேக்ஸ்வெல், நிகோலஸ் பூரண், மயங்க் அகர்வால், சர்வராஸ் கான் ஆகியோர் உள்ளனர். இவர்கள் டெல்லி அணியின் சுழலில் இருந்து எப்படி தப்பிக்கிறார்கள் என்பதில்தான் ஆட்டத்தின் முடிவு உள்ளது.