வடக்கில் விவசாயிகளுக்கு வழங்கப்படவுள்ள சலுகைகள்

வடக்கில் விவசாயிகளுக்கு வழங்கப்படவுள்ள சலுகைகள்

நவீன தொழில்நுட்பம் மற்றும் முறைகள் மூலம் விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான புதிய அரசாங்கத்தின் கருத்தான ‘சித்தமு’ உழவர் சங்கங்கள் வடக்கில் செயல்படுத்தப்படவுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

அண்மையில் தனது வடக்கு பயணத்தின் போது இந்த அறிவிப்பை வெளியிட்ட அமைச்சர், இந்த திட்டத்தின் கீழ் வடக்கில் உள்ள விவசாயிகளுக்கு சலுகைகள் வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.

நான்கு தசாப்தங்களில் முதல்முறையாக தமிழ் பேசுவதில் திறமையான ஒரு விவசாய அமைச்சர் வடக்கே விஜயம் செய்தார் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது. அவரது பயணத்தின் போது அப்பகுதியில் விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து அமைச்சர் கலந்துரையாடினார்.

இந்த நிகழ்ச்சியில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ராஜாங்க அமைச்சர்கள் டி. பி. ஹேரத், மொகான் டி சில்வா மற்றும் சஷிந்திர ராஜபக்ஷ உட்பட விவசாய அமைச்சகத்தின் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.