
மாலைதீவில் சிக்கியிருந்த 291 இலங்கையர்கள் நாடுதிரும்பினர்
கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக மாலைதீவில் சிக்கியிருந்த 291 இலங்கையர்கள் இன்று (சனிக்கிழமை) நாடு திரும்பியுள்ளனர்.
ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான UL-102 என்ற விசேட விமானம் ஒன்றின் மூலம் காலை 11.35 மணியளவில் இவர்கள் பண்டாரநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த 291 பேரிடமும் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும் சோதனை முடிவுகள் அறியப்படும் வரை விமானநிலையத்திற்கு அருகில் உள்ள 4 விடுதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் எனவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
மேலும் இந்த சோதனையின் முடிவு வெளியானதை அடுத்து அவர்கள் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பிவைக்கப்படுவார்கள் என்றும் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.