
இடைநடுவில் தவிக்கும் பொதுமக்கள்! விடுத்துள்ள கோரிக்கை
மாங்குளத்திலிருந்து முல்லைத்தீவு நோக்கி புறப்படுகின்ற தனியார் மற்றும் அரச பேருந்து சேவைகள் தொடர்பில் மக்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.
இதுகுறித்து பொதுமக்கள் கருத்து வெளியிடுகையில்,
இதனால் யாழ்ப்பாணத்திலிருந்து வரும் ஆசிரியர்கள் மற்றும் அரச உத்தியோகத்தர்கள் உரிய நேரத்திற்கு கடமைக்கு செல்லமுடிவதில்லை.
பாடசாலை செல்லும் மாணவர்கள், ஒட்டுசுட்டான் பிரதேச செயலகம் செல்லும் பொதுமக்கள், மாவட்ட பொது வைத்தியசாலை மற்றும் பிற தேவைகளுக்காக முல்லைத்தீவு நோக்கி செல்கின்ற மக்கள் தொடர்ச்சியாக பாதிக்கப்படுகின்றார்கள்.
இ.போ.ச பேருந்து சேவையில் ஈடுபடும் பேருந்துகள் இடைநடுவில் இயந்திரக்கோளாறு ஏற்படுகின்றது.
தனியார் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் பேருந்து நேர ஒழுங்கின்படி சேவைக்கு சமூகமளிப்பதில்லை.
உரிய தரப்பினர் இதனை கவனத்திலெடுத்து சீரான போக்குவரத்து சேவை நடைபெறுவதனை உறுதிப்படுதுமாறு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.