யாழில் சடலமாக மீட்கப்பட்ட விவசாயி!

யாழில் சடலமாக மீட்கப்பட்ட விவசாயி!

யாழ். நவாலி வயல் வெளிப் பகுதியில் விவசாயி ஒருவர் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக மானிப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மாவிட்டபுரத்தைச் சேர்ந்த செல்லத்துரை கனகரத்தினம் (வயது -68) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

வயலில் வரம்பு கட்டும் வேலையில் ஈடுபட்டிருந்த போது அவர் உயிரிழந்திருக்கலாமெனவும் கை மற்றும் காலில் சிறு காயம் காணப்படுவதால் பாம்பு தீண்டியிருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.