சீன பிரஜைகள் 53 பேர் நாட்டிற்கு வருகை!

சீன பிரஜைகள் 53 பேர் நாட்டிற்கு வருகை!

நாட்டில் முன்னெடுக்கப்பட்டுவரும் அபிவிருத்தி திட்டங்களில் பணியாற்றும் சீன பிரஜைகள் 53 பேர் நாட்டிற்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.

சீனாவில் இருந்து கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் நோக்கி பயணித்த ஈஸ்டர்ன் விமான சேவைக்கு சொந்தமான போயிங் 777 எனும் விமானமூடாக இவர்கள் நேற்று இரவு நாடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் குறித்த அனைவரும் விமான நிலையத்தில் பி.சி.ஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.

இதேவேளை கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நாட்டில் நிர்க்கதிக்குள்ளாகியிருந்த 206 சீன பிரஜைகள் மீண்டும் நாடு திரும்பியுள்ளனர்.

கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகைதந்த ஈஸ்டர்ன் விமான சேவைக்கு சொந்தமான போயிங் 777 எனும் விமானமூடாக குறித்த அனைவரும் சீனாவின் ஷங்காய் நகருக்க அழைத்து செல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.