யாழில் கடற்படையினரிடம் சிக்கியது 104 கிலோ கேரளா கஞ்சா
கடல் வழியாக நாட்டுக்குள் கொண்டுவரப்பட இருந்த 104 கிலோ கிராமுக்கும் அதிகமான கேரளா கஞ்சா கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக போதைப்பொருளை நாட்டுக்குள் கொண்டுவர முயற்சிப்பவர்களை கண்டுபிடிக்க கடற்படையினர் விசேட தேடுதலை மேற்கொண்டனர்.
இதற்கமைய 104 கிலோ கிராமுக்கும் அதிகமான கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதுடன் மாதகல் பிரதேசத்தைச் சேர்ந்த இருவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இருவரையும் அவர்கள் பயன்படுத்திய படகு மற்றும் கைப்பற்றப்பட்ட பொருட்களையும் இளவாளை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.