மீண்டும் முடக்கப்படும் பிரித்தானியாவின் சில பகுதிகள்! சிலமணி நேரத்தில் வெளியாகவுள்ள அறிவிப்பு

மீண்டும் முடக்கப்படும் பிரித்தானியாவின் சில பகுதிகள்! சிலமணி நேரத்தில் வெளியாகவுள்ள அறிவிப்பு

வட கிழக்கு பிரித்தானியாவில் ஊரடங்கு அறிவிக்கப்படவுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்களால் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று தீவிரமாக அதிகரித்து வருவதையடுத்தே இக்கட்டுப்பாடுகள் விதிக்கப்படவுள்ளன.

இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பை சுகாதார செயலாளர் மாட் ஹாங்கொக் சிலமணி நேரங்களில் வெளியிடவுள்ளார்.

சமீபத்தில் கொரோனா அதிகரித்து வரும் பகுதிகளான Newcastle, Northumberland, North Tyneside, South Tyneside, Gateshead, County Durham மற்றும் Sunderland ஆகிய இடங்களுக்கு இக்கட்டுப்பாடுகள் பொருந்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பல கட்டுப்பாடுகளுடன் இன்று இரவு முதல் ஊரடங்கு அமுலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.