சிவாஜிலிங்கம் பிணையில் விடுதலை!

சிவாஜிலிங்கம் பிணையில் விடுதலை!

நீதிமன்றத் தடை உத்தரவையும் மீறி தியாகி திலீபனுக்கு நினைகூரல் நிகழ்வு நடத்திய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட வட மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கத்துக்கு கடும் எச்சரிக்கையின் பின்னர் பிணை வழங்கி யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

அத்துடன், அவருடன் கைதுசெய்யப்பட்ட வாடகைக்கு அமர்த்தப்பட்ட முச்சக்கர வண்டிச் சாரதியும் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

“உங்களுக்கு நீதிமன்ற தடை உத்தரவு கிடைக்கவில்லை என்று மன்றுரைக்கப்பட்டுள்ளது. நீங்கள் நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளிட்ட உயர் பதவிகளை வகித்தவர். அவ்வாறு இருக்கையில் இந்த விபரத்தை அறிந்திருக்காமல் இருக்கமுடியாது.

சட்டத்தின் படியே நீதிமன்றக் கட்டளைகள் இயற்றப்படுகின்றன. அது எல்லோருக்கும் சமம். இனி இவ்வாறு நடக்கக்கூடாது” என்று யாழப்பாணம் நீதவான் ஏ.பீற்றர் போல் பிணைக் கட்டளை வழங்கினார்