துப்பாக்கி பிரயோகத்தில் முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் பலி

துப்பாக்கி பிரயோகத்தில் முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் பலி

ஹங்வெல்ல-எலமலவல பிரதேசத்தில் முச்சக்கரவண்டி சாரதியொருவர் நேற்று சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். நேற்றைய தினம் மாலை 6 மணியளவில் உந்துருளியில் பயணித்த நபரொருவர் குறித்த முச்சக்கரவண்டி சாரதி மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

சம்பவம் தொடர்பிலான விரிவான விசாரணைகளை ஹங்வெல்ல காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர். சம்பவத்தில் உயிரிழந்த நபர் வெலிபில்லேவ பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது. குறித்த நபரின் சடலம் அவிசாவளை மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதோடு, துப்பாக்கி பிரயோகத்திற்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை.