யாழில் இன்று மாலை இடம்பெற்ற பயங்கரம் -கத்தி குத்து தாக்குதலில் ஒருவர் பலி

யாழில் இன்று மாலை இடம்பெற்ற பயங்கரம் -கத்தி குத்து தாக்குதலில் ஒருவர் பலி

யாழ்ப்பாணம் பருத்தித்துறை பகுதியில் கத்திக் குத்து தாக்குதலுக்கு இலக்காகிய ஒருவர் உயிரிழந்துள்ளதாக மந்திகை ஆதார வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்தன.

பருத்தித்துறை வியாபாரி மூலையில் இன்று மாலை இந்தச் சம்பவம் இடம்பெற்றது என்று பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

அதே இடத்தைச் சேர்ந்த கணேசலிங்கம் நடேசலிங்கம் (வயது -39) என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.

அவரை கத்தியால் குத்தி கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.