நேற்று அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்கள் தொடர்பில் வெளியான தகவல்

நேற்று அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்கள் தொடர்பில் வெளியான தகவல்

நாட்டில் நேற்றைய தினம் 3 பேருக்கு கொவிட்-19 தொற்றுறதியானது.
 
கடற்படை சிப்பாய் இருவருக்கும், கட்டாரிலிருந்து நாடு திரும்பிய நிலையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த ஒருவக்கும் கொவிட்-19 தொற்றுறதியானதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
 
இதன்படி, நாட்டில் கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 1,880 ஆக அதிகரித்துள்ளது.
 
இதேநேரம், நேற்றைய தினம் 46 பேர் குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.
 
இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து குணடைந்தோரின் மொத்த எண்ணிக்கை ஆயிரத்து 196 ஆக அதிகரித்துள்ளது.
 
இந்த நிலையில், 673 பேர் நாட்டின் பல்வேறு வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.