இன்றைய ராசிபலன் 15/09/2020
மேஷம்
மேஷம்: எதிர்பார்த்தவைகளில் சில தள்ளிப் போனாலும் எதிர்பாராத ஒருவேலை முடியும். தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். நண்பர்கள் உதவுவார்கள். புதுவேலை கிடைக்கும். வியாபாரத்தில் புது தொடர்பு ஏற்படும். உத்தியோகத்தில் திருப்தி உண்டாகும். பழைய நினைவுகளில் மூழ்கும் நாள்.
ரிஷபம்
ரிஷபம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். பேச்சில் முதிர்ச்சி தெரியும். சொத்து பிரச்சினைக்கு சுமூக தீர்வு கிடைக்கும். விருந்தினர்களின் வருகையால் வீடு களைக்கட்டும். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவால் நினைத்ததை முடிப்பீர்கள். முயற்சியால் முன்னேறும் நாள்.
மிதுனம்
மிதுனம்: கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். நீண்ட நாள் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர்கள். திடீர் பணவரவு உண்டு. விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். புது முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். இனிமையான நாள்.
கடகம்
கடகம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் சிக்கலான சவாலான காரியங்களையெல்லாம் கையில் எடுத்து கொண்டிருக்காதீர்கள். சிறுசிறு அவமானம் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் வேலையாட்கள் அதிருப்தி அடைவார்கள். மாலை 2.25 மணி முதல் ராசிக்குள் இருந்து சந்திரன் விலகுவதால் மாலையில் மகிழ்ச்சி பெறும் நாள்.
சிம்மம்
சிம்மம்: குடும்பத்தில் விட்டு கொடுத்து போவது நல்லது. சகோதர வகையில் மனத்தாங்கல் வந்து நீங்கும். பழைய கடனை தீர்க்க முயற்சி செய்வீர்கள். உடல்
நலத்தில் கவனம் தேவை. ஆடம்பர செலவுகளால் சேமிப்பு கரையும். உத்தியோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும். மாலை 2.25 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் எதிலும் கவனமுடன் செயல்பட வேண்டிய நாள்.
கன்னி
கன்னி:
துலாம்
துலாம்: உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். உடன் பிறந்தவர்கள் உங்களிடம் முக்கியவிஷயங்களை பகிர்ந்துக் கொள்வார்கள். வியாபாரத்தில் புகழ் பெற்ற
நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் முக்கியத்துவம் தருவார்கள். வெற்றி பெறும் நாள்.
விருச்சிகம்
விருச்சிகம்: குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். புதியவர் கள் நண்பர்களாவார்கள். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்தியோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரை தருவார்கள். உற்சாகமான நாள்.
தனுசு
தனுசு: சந்திராஷ்டமம் இருப்பதால் சில விஷயங்களை திட்டமிட்டது ஒன்றாகவும் நடப்பது ஒன்றாகவும் இருக்கும். பிள்ளைகளிடம் கோபத்தை காட்டாதீர்கள். பணப்பற்றாக்குறையால் பிறரிடம் கைமாற்றாக வாங்க வேண்டி வரும். உத்தியோகத்தில் மறைமுக தொந்தரவுகள் வந்து நீங்கும். மாலை 2.25 மணி முதல் சந்திராஷ்டமம் விலகுவதால் எதிலும் மாற்றங்கள் நிறைந்த நாள்.
மகரம்
மகரம்: சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். மனைவி வழியில் ஆதரவு பெருகும். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் உண்டாகும். உத்தியோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். பிற்பகல் 2.25 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் கவனமுடன் செயல்பட வேண்டிய நாள்.
கும்பம்
கும்பம்: குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். உத்தியோகத்தில் சில புதுமைகளை செய்து எல்லோரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள். அமோகமான நாள்.
மீனம்
மீனம்: புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்க தொடங்குவீர்கள். வேற்று மதத்தவர் உதவுவார். உத்தியோகத்தில் உங்களின் நிர்வாக திறமை வெளிப்படும். நினைத்தது நிறைவேறும் நாள்.